பெண் விமானிகளே இயக்கும் விமானம் - இந்திய விமான வரலாற்றில் சாதனை

இந்திய விமான வரலாற்றில் சாதனை நிகழ்வாக அமெரிக்காவில் இருந்து பெண் விமானிகளை கொண்டு இயக்கப்பட்ட நேரடி விமானம் பெங்களூருவில் தரையிறங்கியது..
பெண் விமானிகளே இயக்கும் விமானம் - இந்திய விமான வரலாற்றில் சாதனை
x
விருப்பமும், சாதிக்கும் முயற்சியும், எட்டும் இலக்கும் பிரமாண்டமாக இருக்கும் போது, தடைகளை எல்லாம் தட்டி தூக்கிவிடலாம் என்பதை நிரூபித்து வருகின்றனர் இந்திய பெண்கள்  

இந்தியர்களுக்கு விண்வெளி என்றாலே நினைவுக்கு வருபவர் கல்பனா சாவ்லா தான்..  

சண்டிகரில் இருக்கும் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விண்வெளி பொறியியல் படித்த அவர்,  அடிப்படையில் ஒரு விமானி மட்டுமின்றி வானூர்தி மற்றும் விமானம் தாங்கி கப்பல்  பயிற்சியாளர்...

அவரை 'ரோல் மாடலாக' கொண்ட பெண்கள் வானில் தடம் பதித்து சாதித்தும் வருகின்றனர். 

சமுதாயத்தில் நீளும் தீ நாக்குகளை தீயிட்டு கொழுத்தி, கொடி கட்டிப்பறக்கும் அவர்கள் இந்திய விமானத்துறை   வரலாற்றில் மற்றொரு சாதனையை தற்போது நிகழ்த்தியுள்ளனர்.

முழுக்க இந்திய பெண் விமானிகளால், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் பெங்களூருவில் தரையிறங்கியது.

ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன் சோயா அகர்வால், கேப்டன் பாபகரி தன்மாய், கேப்டன் அகன்ஷா சோனாவேர், கேப்டன் சிவானி மன்ஹாஸ் ஆகியோரால்,  வரலாற்று சிறப்புமிக்க இந்த விமானம் இயக்கப்பட்டுள்ளது.

விமானத்தை தலைமை யேற்று இயக்கிய கேப்டன் சோயா அகர்வால் 8 ஆயிரம் மணி நேரத்துக்கும் அதிகமாக பறந்த அனுபவமும், போயிங்-777 விமானத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவமும் கொண்ட திறமையான விமானி...

அவருடைய குழு, எதிர் எதிர் முனையில் உள்ள சான்பிரான்சிஸ்கோ, பெங்களூரு நகரங்கள் இடையிலான சுமார் 14 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடினமானதாக பார்க்கப்படும் வடதுருவத்தின் மேலே சென்று அட்லாண்டிக் பாதையில் பயணித்து விமானத்தை அவர்கள் தரையிறக்கியுள்ளனர்.  

பெண் விமானிகளால் இயக்கப்படும் இந்த விமானம் தான் இந்தியா நிறுவனங்களால் இயக்கப்படும் உலகின் மிக நீண்ட வணிக விமானமாகும். ஏர் இந்தியாவின் பெண்கள் சக்தி, உலகம் முழுவதும் உயர பறந்த வரலாற்று சிறப்புமிக்க உன்னத நிகழ்வு, பெண்களுக்கு மேலும் ஒரு பெருமையை சேர்த்துள்ளது என்றால் மிகையல்ல. 

Next Story

மேலும் செய்திகள்