ஏமன் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு - 26 பேர் உயிரிழப்பு

ஏமன் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பயணம் செய்த விமானம் தரையிறங்கிய போது வெடிகுண்டு வீசி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 26 பேர் உயிரிழந்தனர்.
ஏமன் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு - 26 பேர் உயிரிழப்பு
x
தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில் 2015 முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. சவுதி அரேபியா ஆதரவுப்பெற்ற அரசு தரப்புக்கும் ஈரான் ஆதரவுப்பெற்ற ஹவுத்தி கிளர்ச்சி படைக்கும் இடையே மோதல் தொடர்கிறது. இந்த நிலையில் தென்பகுதி பிரிவினைவாதிகள் மற்றும் பன்னாட்டு அங்கீகாரம் பெற்ற அரசும் இணைந்து கடந்த 18ஆம் தேதி புதிய அரசை அமைத்தன. பிரதமர் அப்துல் மாலிக் தலைமையிலான 24 பேர் அடங்கிய அமைச்சரவை குழு சவுதி தலைநகர்  ரியாத்தில் பதவியேற்ற பின்னர் ஏமன் திரும்பியது. 

அவர்களுடைய விமானம் ஏடனில் தரையிறங்கிய போது பயங்க சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 26 பேர் உயிரிழந்தனர் என்றும் 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்கு துப்பாக்கி சூடு தாக்குதலும்  நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மற்றும் அமைச்சரவை குழு பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் அழைத்து செல்லப்பட்ட பகுதியிலும் 2-வது வெடிகுண்டு வெடித்ததாக உள்ளூர் மீடியாக்கள் தகவல் வெளியிட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்