அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - மருத்துவமனைகளில் முழுவதும் நிரம்பிய படுக்கைகள்

அமெரிக்காவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் முழுவதுமாக நிரம்பி உள்ளன.
அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - மருத்துவமனைகளில் முழுவதும் நிரம்பிய படுக்கைகள்
x
அமெரிக்காவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள  பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் முழுவதுமாக நிரம்பி உள்ளன. போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், மருத்துவமனைக்கு வெளியே தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரிட்டனில் வேகம் பிடிக்கும் கொரோனா தொற்று  

பிரிட்டனில் இதுவரையில் இல்லாத வகையில் ஒரே நாளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அங்கு புதிய வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

பிரிட்டனில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது. அங்கு இதுவரையில் இல்லாத வகையில் நேற்று செவ்வாய் கிழமை 53 ஆயிரத்து 135 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் 414 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மற்றொரு அதிர்ச்சி தகவலாக அனைத்து பாதிப்புகளும் தரவுகளும் வெளியிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. இதனால், அந்நாட்டு சுகாதார அமைப்பு எதிர்பாராத நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளது சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். ஊரடங்கையும் மீறி வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

கொரோனா தடுப்பூசி போட்ட கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். வாஷிங்டனில் உள்ள யுனைடட் (United) மெடிக்கல் சென்டரில் அவருக்கு மாடர்னா மருந்தின் முதல் டோஸ் செலுத்தியது,  தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. அதே போல் கமலாவின் கணவரும் மாடர்னா மருந்தை போட்டுக்கொண்டார். பின்னர் பேசிய கமலா ஹாரிஸ், விஞ்ஞானிகள் தடுப்பூசியை உருவாக்கி ஒப்புதல் அளித்ததால் நான் அவர்களை நம்புகிறேன் என தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம் - சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது. ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்ட ஸ்புட்னிக் - வி தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், முதியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு அர்ஜென்டின அரசு முன்னுரிமை அளித்து உள்ளது.

"தடுப்பூசி செலுத்துவதில் டிரம்ப் நிர்வாகம் தோல்வி" - அதிபராகவுள்ள பைடன் குற்றச்சாட்டு

மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், தோல்வியை தழுவி வருவதாக, அதிபராக தேர்வாகி உள்ள ஜோ பைடன் குற்றம்சாட்டி உள்ளார். வில்மிங்டன் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு இறுதிக்குள் 2 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று டிரம்ப் கூறியதாகவும், ஆனால், இதுவரை 20 லட்சம் மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.





Next Story

மேலும் செய்திகள்