முன்கூட்டியே வெற்றியைக் கொண்டாடிய வீரர் : முயல் - ஆமை கதை போல ஏமாற்றமே மிஞ்சியது
பதிவு : டிசம்பர் 24, 2020, 04:25 PM
முயல் - ஆமை கதையைப் போல முன்கூட்டியே வெற்றியைக் கொண்டாடிய மோட்டார் பந்தய வீரருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
முயல் - ஆமை கதையைப் போல, முன்கூட்டியே வெற்றியைக் கொண்டாடிய மோட்டார் பந்தய வீரருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிரேசில் நாட்டில் நடைபெற்ற போட்டியில், கடைசி சுற்றில் முதலிடத்தில் இருந்த ஆண்ட்ரே வெரிஸ்ஸிமோ, எல்லைக் கோட்டை நெருங்குவதற்கு முன்பாகவே வெற்றியைக் கொண்டாடினார். அதற்குள், அவருக்குப் பின்னால் வந்த இரண்டு வீரர்கள், வெரிஸ்ஸிமோவை முந்திச் சென்று வெற்றி பெற்றனர். இந்தப் போட்டியில் வெரிஸ்ஸிமோ தோல்வி அடைந்திருந்தாலும், சூப்பர் பைக் சீசனுக்கான சாம்பியன் என்ற பட்டத்தைப் பெற்றார். 

வேக்போர்டு வீரரின் அசாத்திய சாதனை - டக்கர் ரேலி லாரி ஓட்டுநருடன் சேர்ந்து சாகசம்

ரஷ்யாவைச் சேர்ந்த வேக்போர்டு வீரர் நிகிதா மார்த்தியனோவ், புதிய வகை சாகசத்தை மேற்கொண்டிருக்கிறார். டக்கர் ரேலி ரக லாரியை, ஓட்டுநர் ஆன்டன் ஷிபலோவ் கரடுமுரடான பாதையில் ஓட்டுகிறார். அதன் பின்னால் கயிறைக் கட்டி, சீரான வேகத்தில் நீரில் வேக்போர்டு மூலம் பயணிக்கும் மார்த்யனோவ், பாதையின் குறுக்கும் நெடுக்குமாக தாவி சாகசம் செய்கிறார். 

பிரான்ஸ் எல்லையில் குவிந்து நிற்கும் லாரிகள்

இங்கிலாந்தின் கென்ட் பகுதியில், சரக்கு லாரிகள் குவிந்து நிற்கும் நிலையில், வாகன ஓட்டிகளுக்கு தன்னார்வ அமைப்பு உணவு வழங்கி வருகிறது. கால்சா எய்ட் (Khalsa Aid) எனும் சர்வதேச தொண்டு அமைப்பு, காவல்துறையினர் உதவியுடன் கொட்டும் மழையிலும், லாரி ஓட்டுநர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குகிறது. பிரான்ஸ் அரசு எல்லையை மூடியுள்ள நிலையில், டோவர் பகுதியில் பல்லாயிரக்கணக்கான சரக்கு லாரிகள், குவிந்து நிற்பது குறிப்பிடத்தக்கது. 

"மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை" - மீண்டும் கடுமையாக்கப்பட்ட ஊரடங்கு விதிகள்

மெக்சிகோ நாட்டில் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறையால், ஊரடங்கு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, பொதுமக்கள் பொது இடங்களில் கூடத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், மருத்துவமனைகளில் குறைந்த அளவிலேயே படுக்கைகள் இருப்பதாக, அரசு குறுஞ்செய்தி மூலம் அறிவுறுத்தி வருகிறது. மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், தொற்று அதிகமுள்ள பகுதி என எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க போர்க்கப்பலை விரட்டிய சீனா ? - சீனா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமெரிக்கா மறுப்பு

தெற்கு சீன கடல் பகுதியில் ரோந்து மேற்கொண்ட,  அமெரிக்க கடற்படையே சேர்ந்த, ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் ஒன்றை அங்கிருந்து விரட்டையடித்தாக சீனா தெரிவித்துள்ளது.ஆனால் திட்டமிட்டபடி தங்களின் ரோந்து பணிகளை முடித்து கொண்டு, தங்களின் கால அட்டவணைப்படி தான் அந்த பகுதியை விட்டு வெளியேறியதாக அமெரிக்க கடற்படையின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். தெற்கு சீன கடல் பகுதி மீது சட்டவிரோதமாக தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த சீனா செய்யும் முயற்சி தான் இத்தகைய பொய்யான அறிக்கைகள்  என்று அமெரிக்க கடற்படை மறுத்துள்ளது.

ராணி மேரி விளையாடிய "சொப்பு சாமான்கள்" ஏலம்

இங்கிலாந்து அரச பரம்பரையில் வந்த ராணி மேரிக்கு பரிசாக அளிக்கப்பட்ட சொப்பு சாமான்கள், ஜனவரி மாதம் ஏலத்திற்கு வர உள்ளது. பக்கிங்காம் அரணம்னையில் வசித்து வரும், இரண்டாம் ராணி எலிசபெத்தின், பாட்டியே ராணி மேரி ஆவார். நூறாண்டுகளுக்கு முன்பு, ராணி மேரி விளையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட, இந்த சிறிய அளவிலான தேநீர் கோப்பைகள், தட்டுகள் உள்ளிட்ட 76 பொருட்களை பிரபல நிறுவனம் ஏலத்திற்கு விட முடிவு செய்துள்ளது. தற்போது ஆன்லைன் மூலம் துவங்கியுள்ள ஏலம், ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  

இஸ்லாமியர்களின் உடலை எரிப்பதற்கு எதிர்ப்பு - சிறப்புக்குழுவை நியமித்து இலங்கை அரசு ஆய்வு

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் மெளன போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை எரிப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதுகுறித்து முடிவு செய்வதற்காக இலங்கை அரசு சிறப்புக்குழு ஒன்றை நியமித்துள்ளது. இந்தக் குழுவின் முடிவு வரும் வரை, அங்கு இதே நிலை தொடரும் என கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

180 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

140 views

பிற செய்திகள்

அமெரிக்காவில் முதல் பெண் நிதியமைச்சராகி சாதனை

அமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதான ஜனத் யெல்லன் பதவியேற்று உள்ளார்.

139 views

ஹெச்-4 விசா மூலம் பணியாற்ற அனுமதி - அமெரிக்கவாழ் இந்தியர்கள் வரவேற்பு

அமெரிக்காவுக்கு ஹெச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணியாற்றுவதற்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்து உள்ளார்.

170 views

இங்கிலாந்தில் 'பேஸ்புக் நியூஸ்' தொடக்கம்

பேஸ்புக் நிறுவனம் இங்கிலாந்தில் முதன்முறையாக பேஸ்புக் நியூஸ் என்ற பிரத்யேக சேவையை தொடங்கியுள்ளது.

49 views

1 லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை : 2-ம் உலகப்போர் உயிரிழப்பை விட அதிகம்

இங்கிலாந்தில் கொரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

86 views

டைனோசரின் படிமங்கள் கண்டெடுப்பு

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில், அழிந்த விலங்கினமான டைனோசரின் புதை படிமங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

38 views

சீன உறவை அமைதியாக அமெரிக்கா தொடரும் - வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தகவல்

சீனாவுடனான உறவை அமைதியான நிலையில் அமெரிக்கா தொடரும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறி உள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.