பெஞ்சமின் நெதன்யாகு தலை​மையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது - மார்ச் 23-ல் இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல்

இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு மார்ச் மாதம் 23 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
பெஞ்சமின் நெதன்யாகு தலை​மையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது - மார்ச் 23-ல் இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல்
x
இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற 3 தேர்தல்களில் எந்த கட்சியும் பெரும்பான்மையை பெறாத நிலையில், ஆட்சி அமைக்க முடியாத இழுபறி நீடித்தது. இந்நி​லையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கட்சி ஆட்சி அமைக்க, கடந்த ஏப்ரல் மாதம்  blue and white கட்சித் தலைவர் கண்டாஸ் இசைவு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவசர நிலை கூட்டணி அரசு என்று அழைக்கப்படும் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசு கடந்த ஏப்ரல் மாதம் பதவியேற்றது. 18 மாதங்களுக்கு ஒரு முறை பிரதமர் பதவியை பகிர்ந்து கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டணியின் ஓட்டையாக கருதப்பட்டது பட்ஜெட்க்கு உரிய காலத்தில் ஒப்புதல் பெறுவது தான். அது எதிர்பார்த்ததை போலவே நடந்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று பட்ஜெட்க்கான ஒப்புதல் பெற கடைசி நாள் என்ற நிலையில், நெதன்யாகு அரசுக்கு அளித்து வநத ஆதரவை  blue and white கட்சித் தலைவர் கண்டாஸ் திரும்பப் பெற்றதை அடுத்து ஆட்சி கவிழ்ந்துள்ளது. ஆட்சி கவிழ்ந்ததற்கு நெதன்யாகும், கண்டாசும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், வரும் மார்ச் 23 ஆம் தேதி இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு மீண்டும் இடைத் தேர்தல் நடைபெறும் நிலை உருவாகி உள்ளது. நெதன்யாகு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், பொருளாதாரத்தை கையாண்டவிதம், நிச்சயமற்ற நிலைக்கு நாட்டை கொண்டு சென்றதாக நெதன்யாகு மீது கண்டாஸ் குற்றம்சாட்டி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்