இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் 2 பேருக்கு ஜோ பைடன் புதிய பதவி வழங்கி உத்தரவு

இந்திய அமெரிக்கர்களான கவுதம் ராகவன் மற்றும் வினய் ரெட்டி ஆகியோரை வெள்ளை மாளிகையில் கூடுதல் உறுப்பினர்களாக ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார்.
இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் 2 பேருக்கு ஜோ பைடன் புதிய பதவி வழங்கி உத்தரவு
x
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று அடுத்த அதிபராக தேர்வாகி உள்ளார்.  துணை அதிபராக  இந்திய வம்சாவளியரான கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.  ஜனவரி 20 ஆம்தேதி பதவியேற்க உள்ள ஜோ பைடன், அதிபருக்கான அதிகாரத்துடன் பல்வேறு பதவிகளுக்கும்  நியமனம் செய்து வருகிறார். அந்த வகையில் இந்திய வம்சாவளிகளான கவுதம் ராகவன் மற்றும் வினய் ரெட்டி ஆகியோருக்கு இயக்குனர் அந்தஸ்திலான பதவிகளை ஜோ பைடன் வழங்கி உள்ளார். அதிபருக்கான அதிகாரிகள் அலுவலக துணை இயக்குனராக கவுதம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். வெள்ளை மாளிகை மூத்த பணியாளர்களுக்கான கூடுதல் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களில் ஒருவரான கவுதம், பைடன் அறக்கட்டளைக்கு ஆலோசகராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

Next Story

மேலும் செய்திகள்