பிஜி நாட்டை தாக்கிய யாஷா புயல்; கடும் வெள்ள சேதம் - மக்கள் பரிதவிப்பு

கிழக்கு பசிப்பிக் நாடான பிஜியில் வரலாறு காணாத வெள்ள சேதம் ஏற்பட்டு உள்ளது.
பிஜி நாட்டை தாக்கிய யாஷா புயல்; கடும் வெள்ள சேதம் - மக்கள் பரிதவிப்பு
x
கிழக்கு பசிப்பிக் நாடான பிஜியில் வரலாறு காணாத வெள்ள சேதம் ஏற்பட்டு உள்ளது. 300 தீவுகளை உறைவிடமாக கொண்ட பிஜி நாட்டில் யாஷா புயல் வீசி வருகிறது. சூறைக்காற்றுடன் கனமழையும் கொட்டி வருவதால் நாடே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் வெள்ள நீரில் சாலைகள் அடித்து செல்லப்பட்டு உள்ளதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளதாக பிஜி அரசு தெரிவித்து உள்ளது. புயலால் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் விவகாரம் - ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்த பெண்கள்

அர்ஜென்டினாவில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாகக் கோரி, பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் பியனோஸ் ஏர்ஸில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. கத்தோலிக்க மக்கள் அதிகம் வாழும் அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில், கருக்கலைப்பு செய்ய தடை நீடிக்கிறது. இதற்கு முன், கருக்கலைப்பினை சட்டப்பூர்வமாக்கும் முயற்சிகள் செனேட் சபையில் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அதிபர் ஆல்பர்டோ ஃபெர்னாண்டஸ் இதனை தீவிரமாக கையில் எடுத்துள்ளார். 

பைடனுக்கு கொரோனா தொற்று இல்லை - தகவல் வெளியீடு  


அமெரிக்க புதிய அதிபர் பைடனுக்கு கொரோனா தொற்று இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதிபராக தேர்வாகி உள்ள ஜோ பைடனின் ஆலோசகர் செட்ரிக் ரிச்மண்ட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் நெருக்கத்தில் இருந்த பைடனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் பைடனுக்கு தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.       

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு - மின்சார சேவைகள் துண்டிப்பு

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. அந்நாட்டின் வடக்குப் பகுதி நகரங்களில் ஏற்பட்டுள்ள இந்த பனிப்பொழிவால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார சேவைகள் துண்டிக்கப்பட்டு உள்ளது. அங்கு கடந்த 3 நாட்களில் சுமார் 6 அடி உயரத்துக்கு, பனி கொட்டி உள்ளது. 

மனதளவில் துன்புறுத்தப்பட்டேன் - பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அமீர் அதிரடி குற்றச்சாட்டு 


"பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தாலே ஓய்வு பெறுகிறேன்" என்று வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் ஒய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் மனதளவில் துன்புறத்தப்பட்டதாகவும் அதனாலே ஓய்வு பெறும் முடிவை எடுத்ததாகவும் முகமது அமீர் தெரிவித்து உள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்த அமீர் 147 சர்வதேச போட்டிகளில் களமிறங்கி 259 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார். மேலும் 2010-ஆம் ஆண்டு நடந்த இங்கிலாந்து தொடரின் போது சூதாட்ட சர்ச்சையில் சிக்கி 5 ஆண்டுகள் அமீர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்