"ஜெர்மனியில் கொரோனா தொற்று 2ஆம் அலை தீவிரம்"

பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் அடைந்து வரும் நிலையில், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறது ஜெர்மனி.
ஜெர்மனியில் கொரோனா தொற்று 2ஆம் அலை தீவிரம்
x
வழக்கமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்து, அமைதியில் உறைந்திருக்கின்றன, ஜெர்மானிய நகரங்கள். 

கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையை சிறப்பாக கையாண்ட ஜெர்மனி, 2ஆம் அலையைக் கட்டுப்படுத்த எடுத்த பல்வேறு முயற்சிகளும் தோல்வியையே தழுவியுள்ளன. 

இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று, ஜெர்மனியில் அதிகபட்சமாக ஒரே நாளில் 952 பேர் கொரோனாவால் பலியாகினர். அதுமட்டுமின்றி, அந்நாட்டு மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் நெருங்கி வரும் நிலையில், பொதுவெளியில் மக்கள் அதிகம் கூட வாய்ப்பிருப்பதால், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, அந்நாட்டு அதிபர் ஏஞ்செலா மெர்கெல் டிசம்பர் 16 முதல் 2021ம் ஆண்டு ஜனவரி 10 வரை முழு ஊரடங்கை அறிவித்து உத்தரவிட்டிருக்கிறார். 

Next Story

மேலும் செய்திகள்