எல்லை பகுதியில் இந்தியா அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.

எல்லை பகுதியில் இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட மோதலையடுத்து இரு நாடுகளும் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் பெய்ஜிங்கில் பேசிய சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் இந்தியா மீது சரமாரியாக குற்றம்சாட்டினார
எல்லை பகுதியில் இந்தியா அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.
x
அருணாசலபிரதேசத்தையும், லடாக்கையும் இந்தியா சட்டவிரோதமாக உருவாக்கி உள்ளதாகவும், அதை சீனா அங்கீகரிக்கவில்லை என்றும் கூறினார். எல்லை பகுதியில் பதற்றத்துக்கு இந்தியா தான் காரணம் என்று கூறிய சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் , சர்ச்சைக்குரிய பகுதிகளில் 
இந்தியா தொடர்ந்து உள்கட்டமைப்பு கட்டுமான பணிகளை மேற்கொள்வதாகவும், ராணுவத்தை குவிப்பதாகவும் குற்றம் சாட்டினார். 
இருநாடுகளும்  ஒருமித்த கருத்தின் அடிப்படையில், எல்லையில் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்