அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க டிரம்ப் பரிந்துரை

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக அமிகோனி பாரெட்டை நியமிக்க, அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார்
அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க டிரம்ப் பரிந்துரை
x
அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க், தனது 87வது வயதில் புற்றுநோயால் கடந்த 19ஆம் தேதி காலமானார். இவர் 27 ஆண்டுகள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்துள்ளார்.  இவர் இறந்ததை அடுத்து காலியாக உள்ள பணியிடத்துக்கு நீதிபதி அமிகோனி பாரெட் பெயரை அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரைக்க உள்ளார். 48 வயதாகும் பாரெட், தற்போது 7வது சர்கியூட் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். இப்பதவிக்கும் அவருடைய பெயரை அதிபர் டிரம்ப்தான் கடந்த 2017ல் பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடென் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்