அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வம்சாவளி - ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கிய கமலா ஹாரிஸ்

இந்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் , செனட்டராக பணியாற்றும் கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். யார் அவர்... அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு என்பதை இந்த தொகுப்பில் காணலாம்...
அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் தமிழ் வம்சாவளி - ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கிய கமலா ஹாரிஸ்
x
கமலா ஹாரிஸ் , 1964ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி OAKLANDல் பிறந்தவர். இவரது தாயார் ஷியாமலா கோபாலன் சென்னையை சேர்ந்தவர்....

அவரின் உறவினர்கள் அனைவரும் சென்னையில் வசித்து  வருகின்றனர். கமலாவின் தாய் ஷியாமலா கோபாலன் புற்றுநோய் ஆராய்ச்சியாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்.... ஜமைக்காவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்ட ஷியாமலா கோபாலன் , பின்னர் சில மன கசப்புகளால் பிரிந்து வாழ தொடங்கினார். 

தாயின் கட்டுப்பாட்டில் இந்திய பாரம்பரியத்துடன் இணைந்தே வளர்ந்தார் கமலா ஹாரிஸ்... இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பிடன், கலிபோர்னியா செனட்டர்
கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார்... துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் முதல் கருப்பின மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண்ணும் இவரே.... 

இந்நிலையில், அவருக்கும், குடியரசுக் கட்சி துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸுக்கும் இடையே அக்டோபர் 7 ஆம் தேதி விவாதம் நடைபெறவுள்ளது.... இதற்கு முன் அமெரிக்காவில் இரண்டு முறை மட்டுமே துணை அதிபர் பதவிக்கு பெண்கள் போட்டியிட்டுள்ளனர். 

1984ம் ஆண்டில் போட்டியிட்ட ஜனநாயக கட்சியை சேர்ந்த GERALDIN PEREIRA-வும்  மற்றும் 2008ம் ஆண்டு குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சாரா பாலினும் தோல்வியை தழுவினர்... ஆனால் பல தடைகளை தாண்டி தன்னுடைய திறமையால் கமலா ஹாரிஸ் சாதிப்பார் என அரசியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்....


Next Story

மேலும் செய்திகள்