"கொரோனா மருந்து ஆகஸ்ட்-ல் ஒப்புதலுக்கு வரும்" - ரஷ்ய துணை பிரதமர் அறிவிப்பு

கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் கிடைக்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
கொரோனா மருந்து ஆகஸ்ட்-ல் ஒப்புதலுக்கு வரும் - ரஷ்ய துணை பிரதமர் அறிவிப்பு
x
கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் கிடைக்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆன்லைனில் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசிய அந்நாட்டு துணை பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். கமாலயா மையத்தில் தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பு மருந்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் தடுப்பு மருந்து தயாரிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மனிதர்களிடம் தடுப்பு மருந்தை சோதித்து பார்த்து வெற்றி கண்டுள்ள ரஷ்யா அதிக எண்ணிக்கையிலான மக்களிடம் ஆகஸ்ட் மாதம் சோதித்து பார்க்க உள்ளது



சுரங்கத்தளத்தில் இருந்து ஏவுகணை சோதனை வெற்றி  - முதல் சோதனையே வெற்றியானதால் ஈரான் மகிழ்ச்சி

சுரங்கத்தளத்தில் இருந்து ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவி ஈரான் புதிய சாதனை படைத்துள்ளது. அந்நாட்டில் ராணுவ பயிற்சியின் போது, முதல்முறையாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. முதல் சோதனையே வெற்றியடைந்த‌தால் ஈரான் அரசும் ராணுவ தலைமையும் மகிழ்ச்சியடைந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்