கொரோனாவோடு பழகுவோம் - ஊரடங்கு அலப்பறைகள்

கொரோனா வைரஸ் தந்த நெருக்கடி மற்றும் ஊரடங்கு காலகட்டம் காரணமாக உலகம் முழுவதுமே பொதுமக்கள் பல வித்தியாச விஷயங்களை செய்து மன அழுத்தத்துக்கு மருந்து தடவி வருகிறார்கள்.
கொரோனாவோடு பழகுவோம் - ஊரடங்கு அலப்பறைகள்
x
கொரோனா வைரஸ் தந்த நெருக்கடி மற்றும் ஊரடங்கு காலகட்டம் காரணமாக உலகம் முழுவதுமே பொதுமக்கள் பல வித்தியாச விஷயங்களை செய்து மன அழுத்தத்துக்கு மருந்து தடவி வருகிறார்கள். அது பற்றிய சிறப்பு தொகுப்பு ஒன்றை தற்போது பார்க்கலாம்...

முக கவசம் மாற்றி திருமணம்...

திருமணத்தில் இப்போது மாப்பிள்ளை பெண் இல்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் மாஸ்க் கட்டாயம் என்றாகிவிட்டது. அப்புறம் ஏன் மாலை மாற்றிக் கொண்டு? ஒருவருக்கு ஒருவர் முகக்கவசம் மாற்றிக் கொள்ளலாமே எனத் தீர்மானித்துவிட்டது, நேபாள நாட்டைச் சேர்ந்த இந்த ஜோடி.


படம் எடுப்பதை தடுத்த பாம்பு...

இந்த ஊரடங்கு காலம் முகத்தில் மாஸ்க் போடுவதை மட்டுமல்ல... எதற்கெடுத்தாலும் இணையத்தில் வீடியோ போடுவதையும் அதிகரித்திருக்கிறது. அப்படித்தான் கேரளாவில் ஒரு பெண், அரணை ஒன்றை வீடியோ எடுத்தபடி அதைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். திடீரென்று அந்த அரணையைப் பிடிக்க பாம்பு ஒன்று பாயும் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லை...


வாஷிங் மிஷின் இசைக்கருவி ஆனது...

உலகப் புகழ் ஹாரிபாட்டர் படத்தின் தீம் மியூசிக் கேட்டிருக்கிறீர்களா?

இந்த இசையை வாஷிங் மிஷின் பட்டன்கள் வழியே கொண்டு வர முடியும் எனக் காட்டியிருக்கிறார்கள் இந்த வித்தியாச இசைக்கலைஞர்கள்.
பிரீத் (திருவிளையாடல் கமென்ட்: என் பாட்டுக்கு எதிர் பாட்டு இல்லை என்று நினைத்திருந்தே அந்த எண்ணம் ஒழிந்தது)

Next Story

மேலும் செய்திகள்