உலக சுகாதார மையத்திலிருந்து அமெரிக்கா விலகல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி

உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
உலக சுகாதார மையத்திலிருந்து அமெரிக்கா விலகல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி
x
வாசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார மையம் சரியாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டினார். சீனாவுக்கு ஆதரவாக  அந்த அமைப்பு இயங்கியதாகவும் அவர் புகார் தெரிவித்தார். இதனால், உலக சுகாதார மையத்துடன் உள்ள அனைத்து உறவையும் முறித்துக் கொள்வதாக  டிரம்ப் கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவில் வாழும் சீன ஆராய்ச்சியாளர்களை  உடனடியாக வெளியேறுமாறு டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனா ஆராய்ச்சியாளர்களால் அமெரிக்காவுக்கு ஆபத்து என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்கா விலகியதால் உலக சுகாதார மையத்திற்கு கடும் நிதி நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவை தடுக்கும் பணியில் தொய்வு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்