முன்னாள் காதலனுக்கு ஒரு டன் வெங்காயம் பரிசு - வைரல் ஆகி வரும் வெங்காய காதல் முறிவு

சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனை பழிவாங்க அவர் வீட்டுக்கு ஒரு டன் வெங்காயத்தை அனுப்பி வைத்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவரும் இந்த விசித்திரத்தை விளக்குகிறது
முன்னாள் காதலனுக்கு ஒரு டன் வெங்காயம் பரிசு - வைரல் ஆகி வரும் வெங்காய காதல் முறிவு
x
முன்னாள் காதலியை பழி வாங்க காதலர்கள் தான் இப்படி பரிசு அனுப்ப வேண்டுமா? காதலியும் அனுப்பலாம் எனக் காட்டியிருக்கிறார் சீனாவைச் சேர்ந்த Zhao என்ற பெண். இவர் இவரின் காதலர் வீட்டுக்கு 1 டன் வெங்காயத்தை டெலிவரி பண்ணச் சொல்லியிருக்கிறார். அக்கம் பக்கத்து மக்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க இந்த வெங்காயக் குவியலை அவர் வீட்டு வாசலி கொட்டிவிட்டு போயிருக்கிறார்கள் டெலிவரி பாய்ஸ். இந்த முன்னாள் காதலர் Zhaoவை ரொம்பவே காயப்படுத்தி அழ வைத்துவிட்டாராம். இப்போது நீ அழுவதற்கான நேரம் அதனால்தான் வெங்காயத்தை அனுப்பியிருக்கிறேன் என வாய்ஸ் நோட் மூலம் சொல்லியிருக்கிறார் இந்தக் காதலி. அங்கேயாவது பரவாயில்லை... இந்த வெங்காய பரிசு கண்ணீரோடு போய்விடும். இதைப் பார்த்து நம்மூர் பெண்கள் கோயம்பேடு வெங்காயத்தை அனுப்பினால் விவகாரமாகிவிடும் என இதைப் பார்த்து கமெண்ட் அடிக்கிறார்கள் நெட்டிசன்கள்...

-

Next Story

மேலும் செய்திகள்