அதிக தாக்கும் திறன் கொண்ட அப்பாச்சே ஹெலிகாப்டர்

இந்தியாவுக்கு, அதிநவீன பாதுகாப்பு கருவிகளை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ள நிலையில், இந்தியா வாங்க உள்ள அப்பாச்சே ஹெலிகாப்டரின் திறன் குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.....
அதிக தாக்கும் திறன் கொண்ட அப்பாச்சே ஹெலிகாப்டர்
x
பாதுகாப்புத் துறைக்கு ஹெலிகாப்டர்களை வாங்க அமெரிக்காவுடன் 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்காவின் அப்பாச்சே மற்றும் எம்எச்-60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட உள்ளன.

இந்த ரக ஹெலிகாப்டர்கள் பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடிய சிறப்புகள் கொண்டது என்றாலும், உலகின் டாப் 10 ராணுவ ஹெலிகாப்டர்கள் வரிசையில் 2 வது இடத்தில்தான் உள்ளது. 

முதலிடத்தில், ரஷ்யாவை சேர்ந்த கே. ஏ. 52 அலிகேட்டர் உள்ளது.  உலகின் சிறந்த தாக்குதல் ஹெலிகாப்டர் என பெயர் பெற்றுள்ளது. எந்த வானியல் சூழலிலும் தாக்கும் திறன் கொண்டது.

சிறந்த தாக்குதல் ஹெலிகாப்டர்களில் இரண்டாவது இடத்தில்தான் ஏ.ஹெச் 64 அப்பாச்சே ஹெலிகாப்டர் உள்ளது. நீண்ட நேரம் பறக்கும் ஆற்றல் வாய்ந்த இந்த ஹெலிகாப்டர், மணிக்கு 289 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது.

அதிக அளவிலான ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய அப்பாச்சே,  ஒரே நிமிடத்தில் 128 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது.

ஏற்கெனவே, இந்திய விமான படையில் அப்பாச்சே ஹெலிகாப்டர் இணைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 21 ஆயிரம் கோடிக்கு புதிய ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையின், தாக்குதல் ஹெலிகாப்டராக முக்கிய இடத்தில் உள்ள ரஷ்யாவின் மிக் ரக ஹெலிகாப்டர்களை படிப்படியாக குறைக்கப்பட்டு, அந்த இடத்தை அப்பாச்சே பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்