அரச குடும்பத்தில் இருந்து இங்கிலாந்து இளவரசர் ஹாரி விலகல் : பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர்கள் நிலையில் இருந்து இளவரசர் ஹாரியும் - மேகன் தம்பதி விலகுவதாக, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அரச குடும்பத்தில் இருந்து இங்கிலாந்து இளவரசர் ஹாரி விலகல் : பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வ அறிவிப்பு
x
இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலக போவதாக இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகன் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து  ஹாரி -மேகன் தம்பதியினரிடம்  ராணி எலிசபெத் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில்  முன்னேற்றம்  ஏற்படாத நிலையில் ஹாரி-மேகன் வெளியேற ராணி எலிசபெத் சம்மதம் தெரிவித்தார். பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர் நிலையில் இருந்து அவர்கள் விலகுவதை , பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இனி அவர்களுக்கு சிறப்பு அந்தஸ்து கிடையாது என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது. ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகனின் இந்த முடிவை   பிரதமர் போரிஸ் ஜான்சன் வரவேற்றுள்ளார்.   நாட்டு மக்களும் ஹாரி - மேகன் தம்பதியின் முடிவை வரவேற்பதாக போரிஸ் ஜான்சன்  நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரிட்டன் அரண்மனையில் இருந்து வெளியேறும் ஹாரி - மேகன் தம்பதி கனடாவில் குடியேற முடிவு செய்துள்ளனர். அங்கு அவர்களுக்கு உயர் பாதுகாப்பு வழங்குவது குறித்து கருத்து தெரிவிக்க கனடா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்