சீனாவிலும் தங்கம் விலை அதிரடியாக உயர்வு

சீனாவில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
சீனாவிலும் தங்கம் விலை அதிரடியாக உயர்வு
x
சீனாவில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சீன புத்தாண்டையொட்டி அந்நாட்டு மக்கள் தங்க நகைகளை விரும்பி வாங்கி வரும் நிலையில், இந்த விலை உயர்வால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த மாதம் 1 கிராம் தங்கம் 410 யுவானாக இருந்ததாகவும்,  தற்போது 452 யுவானாக அதிகரித்துள்ளதாகவும் சீன மக்கள் கூறுகின்றனர். தங்கம் விலை நாளுக்கு நாள்  தொடர்ந்து அதிகரித்து வருவதாக நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்