பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தனின் உருவ பொம்மை

இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் வீரர்களிடம் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தனின் உருவ பொம்மை
x
பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தான் அபிநந்தன் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் பாகிஸ்தான் வீரர்களிடம், "டீ அருமையாக உள்ளது, நன்றி" என்று அபிநந்தன் கூறுவது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது. இந்நிலையில், இந்த சம்பவத்தை கேலி செய்யும் விதமாக கராச்சியில் உள்ள பாகிஸ்தான் விமான படை அருங்காட்சியகத்தில் அபிநந்தனின் உருவ பொம்மை வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர் ஒருவர் அபிநந்தனை சிறைப்பிடித்து அழைத்து செல்வது போன்று அது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அன்வர் லோதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "அபிநந்தனின் கையில் ஒரு அருமையான டீயை கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்" என்று நக்கலாக குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்