" சுற்றுச்சூழல் - நகரமயமாக்கலில் முதலீடு செய்ய வாருங்கள்" - அமெ. முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

சுற்றுச்சூழல் மற்றும் நகரமயமாக்கலில் முதலீடு செய்ய விரும்பினால், இந்தியாவுக்கு வருமாறு, அமெரிக்க தொழில் முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.
 சுற்றுச்சூழல் - நகரமயமாக்கலில் முதலீடு செய்ய வாருங்கள் - அமெ. முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
x
நியூயார்க் நகரில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, தொழிலதிபர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, இந்தியாவில் கார்ப்பரேட் வரி ரத்து செய்யப்பட்டது, வர்த்தகத்திற்கு சாதகமான அம்சம் என சுட்டிக்காட்டிய அவர், வர விருக்கும் ஆண்டுகளில், இந்தியாவின் நவீன உள் கட்டமைப்பிற்காக சுமார் 1 புள்ளி 3 டிரில்லியன் டாலர்கள் - அதாவது இந்திய மதிப்பில் சுமார் 92 லட்சம் கோடி ரூபாய் செலவிட உள்ளோம் என்றார். ஜனநாயகம், மக்கள் தொகை, தேவைகள் மற்றும் முடிவெடுத்தல் ஆகிய 4 அம்சங்கள், இந்தியாவின் சிறப்பு என பிரதமர் மோடி குறிப்பிட்டார். நிலக்கரி கிடைக்கும் 3 - வது  மிகப்பெரிய நாடு இந்தியா என்றும், நிலக்கரியை வாயுவாக மாற்றும் தொழில் நுட்பத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தால், மாசு குறையும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். நியூயார்க் முன்னாள் மேயரும், புளும்பெர்க் வர்த்தக அமைப்பின் சி. இ.ஓ- வான மைக்கேல் புளூம்பெர்க் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பிரதமர் நரேந்திரமோடி, மிகவும் சாதுரியமாகவும், விளக்கமாகவும் பதிலளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்