"இந்தியாவின் தந்தை பிரதமர் மோடி" - அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்

இந்தியாவின் தந்தை பிரதமர் மோடி என அமெரிக்க அதிபர் டிரம்ப் புகாழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியாவின் தந்தை பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்
x
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இரண்டாவது முறையாக அந்நாட்டு அதிபர் டிரம்பை நியூயார்க் நகரில் சந்தித்து பேசினார். அப்போது  ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட டிரம்புக்கு மோடி நன்றி தெரிவித்தார். அதிபர் டிரம்ப் தமக்கும் இந்தியாவுக்கும் சிறந்த நண்பர் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய டிரம்ப் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். மோடி மிகச்சிறந்த தலைவர் என குறிப்பிட்ட டிரம்ப், இந்தியாவின் தந்தை என்றும் புகழாரம் சூட்டினார். இம்ரான் கான்  குறித்து கேள்வி எழுப்பிய போது, பாகிஸ்தானை மோடி பார்த்துக்கொள்வார் என்றும் டிரம்ப் கூறினார். சிதறிக் கிடந்த இந்தியாவை, ஒன்று சேர்த்தவர் மோடி என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்