"டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதா?..." - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, "மோடி நலமா" என்ற நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பங்கேற்றார்.
டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதா?... - பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்
x
அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, "மோடி நலமா" என்ற நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பங்கேற்றார்.  அப்போது பேசிய மோடி, பயங்கரவாதத்தை வேரருப்பதில் உறுதியாக இருக்கும் மோடிக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த் சர்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரதமர் மோடியின் பேச்சு, இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்