சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பண விவரம் : இன்று முதல் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் நடைமுறை அமல்
பதிவு : செப்டம்பர் 01, 2019, 02:41 AM
சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்கள் அளிக்கும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
2018-ம் ஆண்டில் உள்ள வங்கி கணக்கு விவரங்கள், கணக்கு முடிக்கப்பட்ட விவரங்கள் இந்தியாவுக்கு கிடைக்கும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இது கருப்பு பணம் மற்றும் 'சுவிஸ் வங்கி ரகசியம்' ஆகியவற்றுக்கு எதிரான அரசின் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றும் அந்த வாரியம் குறிப்பிட்டுள்ளது. சில குறிப்பிட்ட வழக்குகளில் கேட்கும் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் திட்டத்தை துரிதமாக செயல்படுத்துவது குறித்து சுவிட்சர்லாந்து பிரதிநிதிகளுடன், மத்திய வருவாய் துறை மற்றும் நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே  பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

வருமான வரி வரம்பில் வராத குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 - நேரடி பணபரிமாற்றம் செய்ய காங்கிரஸ் கோரிக்கை

கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சனைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வரும் 28 ஆம் தேதி இணையதள பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

32 views

"பீதியை கிளப்பும் காங்கிரஸ் மூவர் அணியை தனிமைப்படுத்த வேண்டும்" - பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா கோரிக்கை

கொரோனா தொற்று பரவலால், நாடு தற்போது ஒரு நெருக்கடியான அவசர நிலையை சந்தித்து வருவதாக பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.

54 views

கர்நாடகாவில் ஒரே நாளில் 93 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

கர்நாடகாவில் ஒரே நாளில் 93 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து அங்கு தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 182 ஆக உயர்ந்துள்ளது.

40 views

புதுச்சேரியில் ஸ்டாலினை கண்டித்து கருப்பு பலூன் பறக்கவிட்டு போராட்டம்

திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து, புதுச்சேரியில் கருப்பு பலூன் பறக்கவிட்டு அதிமுக சட்டமன்ற உறுப்பினரான கொறாடா வையாபுரி மணிகண்டன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

9 views

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய பா.ஜ.க. நிர்வாகிகள் - மனோஜ் திவாரி விளக்கம்

அரியானா மாநிலம் சோனிபேட் மாவட்டத்தில் உள்ள ஷேக்பூராவில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்தில் பா.ஜ.க. எ​ம்.பி.யும், டெல்லி பா.ஜ.க. மாநிலத் தலைவருமான மனோஜ் திவாரி கிரி​க்கெட் விளையாடி உள்ளார்.

19 views

"வானத்தில் மீண்டும் உயரப் பறக்கும் இந்தியர்கள்!" - விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கருத்து

கொரோனா ஊரடங்கு உத்தரவு தளர்வால், 63 நாட்களுக்கு பின்னர் நாட்டில் மீண்டும் உள்ளாட்டு விமான சேவை தொடங்கி உள்ளது.

99 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.