கூகுள் வரைபடத்தின் மூலம் காதலை சொன்ன இளைஞர் - கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற காதல் பயணம்

காதலைச் சொல்வதற்கு விதவிதமாக வழிகளை முயற்சி செய்கிறார்கள் இளைஞர்கள். ஜப்பானைச் சேர்ந்த ஒரு இளைஞரின் வியக்க வைக்கும் வித்தியாசமான முயற்சி இணையத்தில் வைரலாக பரவி வருவதுடன், கின்னஸ் சாதனையிலும் இடம் பெற்றுள்ளது.
கூகுள் வரைபடத்தின் மூலம் காதலை சொன்ன இளைஞர் - கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற காதல் பயணம்
x
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரத்தைச் சேர்ந்தவர் யாஷுஷி  டகாஹஷி.  இவர் தனது தோழி நாட்சுகியிடம் காதலைச் சொல்வதற்காக கூகுள் எர்த் செயலியை பயன்படுத்தி ' மேரி மீ ' என்று வருவதுபோல பயணம் செய்துள்ளார். 

இதற்காக சுமார் 7,000 கிலோ மீட்டர்கள் பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தை ஜி.பி.எஸ் கருவி மூலம், கூகுள் எர்த் செயலியில் வரைபடமாகக் கொண்டு வந்துள்ளார்.

ஜப்பானில் ககோஷிமா கடற்கரையிலிருந்து, காரில் பயணத்தை தொடங்கிய அவர், சுமார் 6 மாதங்களில் 7 ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து இதை கொண்டு வந்துள்ளார்.  Marry me உடன் சேர்த்து இறுதியில் ஒரு இதய வடிவத்தையும் கொண்டு வந்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ ஒன்றை  கூகுள் வெளியிட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி பல விழிப்புணர்வு வரைபடங்கள் வந்துள்ள நிலையில், இதன் மூலம் காதலைச் சொன்னது வித்தியாசமான முயற்சி என்பதுடன், ஜி.பி.எஸ் ஆர்ட்டில் இது மிகப்பெரிய ஓவியம் என்பதால், அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்