உலகை புரட்டிப் போட்ட தட்ப வெப்ப நிலைகள்..மழை, வெயில், பனி, புயல், பஞ்சத்தின் தாக்கம்..

உலகை புரட்டிப் போட்ட தட்ப வெப்ப கால நிலைகளின், ஆய்வுத் தொகுப்பு இது...
உலகை புரட்டிப் போட்ட தட்ப வெப்ப நிலைகள்..மழை, வெயில், பனி, புயல், பஞ்சத்தின் தாக்கம்..
x
வெயில் கொளுத்தும் போது, பொது மக்கள் மழைக்கு ஏங்கித் தவிக்கின்றனர். இன்னொரு பக்கம், வெயில் முகம் தெரியாமல், பலர் தவிக்கின்றனர். தற்போது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது... 

உலகின், அதிகமான வெப்ப நிலை, ஈரானில் உள்ள Bandar Mahshahr-ல் 2010ம் ஆண்டு, 74 செல்சியஸ்-ஆக பதிவானது. 

உலகில், மிக அதிகமான மழைப்பொழிவு, பிரான்சின் ரீயூனியன் தீவில் நிகழ்ந்தது.  ஒரே நாளில் 182 புள்ளி 5 சென்டிமீட்டர் மழை பெய்தது. 1966-ம் ஆண்டு, ஜனவரி 8-ம் தேதி, இது நிகழ்ந்தது. 

உலகின் மிகப்பெரிய பனிப்பொழிவு, அமெரிக்காவின் வாஷிங்டன் அருகே உள்ள மவுண்ட் ரெயினியர் என்ற இடத்தில் நிகழ்ந்தது. 1971-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதிக்கும் 1972-ம் ஆண்டு 18-ந் தேதிக்கும் இடைப்பட்ட ஓராண்டு காலத்தில், 31 புள்ளி 1 மீட்டர் பனிப்பொழிவு இங்கு நிகழ்ந்தது.

உலகின் மிக  வேகமான காற்று வீச்சு, 1999-ம் ஆண்டு மே 3-ஆம் தேதி பதிவானது. அமெரிக்காவின் ஒக்லகாமா நகருக்கு அருகே மணிக்கு 482 கி.மீ. வேகத்தில் இந்த பெரும் காற்று வீசியது.

1970-ல் ஏற்பட்ட போலா புயல், சீனாவில் 1975ம் ஆண்டு ஏற்பட்ட நினா புயல், 2005-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட கத்ரினா புயல் போன்றவை, அதிக சேதம் ஏற்படுத்திய புயல்களாகும்.

மிக மோசமான பேரழிவை ஏற்படுத்திய இயற்கைப் பேரிடர் சுனாமிதான். கடந்த 2004-ம் ஆண்டு இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் உருவான சுனாமி, 11 நாடுகளில் மனித உயிர்களை பலி வாங்கியது. இதனால், மொத்தம் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

பஞ்சமும், உலக நாடுகளில் கொ    த்துக்கொத்தாக உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. 

இந்தியாவில் 1896-1902-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில், பஞ்சம் ஏற்பட்டு 60 லட்சம் பேர் இறந்தனர். இந்தியா, வங்காள தேசத்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தில் நாட்டில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் அழிந்தனர். அப்போது 1 கோடி பேருக்கும் மேல் இறந்ததாக தெரிகிறது. இதுபோல, 10 ஆண்டு இடைவெளியில் இந்தியாவில் மீண்டும் பஞ்சம் ஏற்பட்டு 1 கோடியே 10 லட்சம் பேர் மாண்டனர். 

சீனாவில், 1810ம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சம் மற்றும் 1846-49-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சத்தால், சுமார் நான்கரை கோடி மக்கள் இறந்தனர். 1907-1911-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், பஞ்சத்தில் 2.5 கோடி பேர் இறந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்