ஐஸ் மயமான அதிசய உலகம் அலாஸ்கா

அமெரிக்காவுக்கு வெளியே கனாடா நாட்டை ஒட்டி அமைந்திருக்கும் தன்னந்தனி மாகாணம்தான் அலாஸ்கா.
ஐஸ் மயமான அதிசய உலகம் அலாஸ்கா
x
அமெரிக்காவுக்கு வெளியே கனாடா நாட்டை ஒட்டி அமைந்திருக்கும் தன்னந்தனி மாகாணம்தான் அலாஸ்கா. நிலப்பரப்பின் அடிப்படையில் இதுதான் அமெரிக்காவின் மிகப் பெரிய மாகாணம்.

அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் இந்த மாகாணத்துக்கு அமெரிக்காவில் இருந்து சாலை வழி கிடையாது. விமானத்தில்தான் போயாக வேண்டும். நமக்கெல்லாம் சம்மர் என்றால் ஊட்டி கொடைக்கானல். அதே போல, அமெரிக்கர்களுக்கான குளிர் பிரதேசம்தான் அலாஸ்கா.

ஐஸும் ஐஸ் சார்ந்த இடமும் என அலாஸ்காவைச் சொல்லலாம். மூவாயிரம் நதிகளும் 30 லட்சம் ஏரிகளும் அலாஸ்காவில் உண்டு. ஆனால் எல்லாமே உறைந்திருக்கும். இங்கு 5 சதவீத நிலப்பரப்பை ஐஸ்கட்டிகள்தான் மூடியிருக்கின்றன. உலகின் பாதிக்கும் மேற்பட்ட பனிக்கட்டிகள் இருப்பது அலாஸ்காவில்தான் என்கிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்