சிலருடன் பேசிய ஜாபர் சாதிக்... சிறையில் பதியப்பட்ட குரல்

x

#thanthitv #drugsconnection #jaffer #drug

சிலருடன் பேசிய ஜாபர் சாதிக்...

சிறையில் பதியப்பட்ட குரல்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர்சாதிக்கிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குரல் பதிவு செய்தனர். சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கைப்பற்றப்பட்ட 7 செல்போன்களை ஆய்வகத்திற்கு உட்படுத்திய போது, ஜாபர் சாதிக் சிலருடன் பேசி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் குரல் மாதிரியை பதிவு செய்த அதிகாரிகள், ஏற்கனவே உள்ள உரையாடல்களுடன் ஒப்பிட்டு பார்க்க உள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்