"அவங்க அடிச்சனால தான் போய்ட்டாரு"..மறுவாழ்வு மையத்தில் இளைஞர் மர்ம மரணம்..வெளியான பகீர் தகவல்

x

சந்திரசேகரின் உடலில் காயங்கள் இருந்தது குறித்து உறவினர்கள் கேட்டபோது, தகராறு செய்ததால் கை, கால்களை கட்டி வைத்ததாக போதை மறுவாழ்வு மைய நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், சந்திரசேகரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சந்திரசேகரை போதை மறுவாழ்வு மைய நிர்வாகிகள் இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. மேலும், தனது கணவரை அடித்துக் கொலை செய்திருப்பதாக, சந்திரசேகரின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்