தமிழகத்தில் தோன்றிய ஹிமாச்சல்.. பார்க்குமிடமெல்லாம் பனி போன்றவை.. ஏழைகளை குளிரவைத்த AC மாதம்..

x

நீலகிரியில் நவம்பர் முதல் ஜனவரி வரை உறை பனி காலம்... ஆனால் இவ்வாண்டு தொடர் மழையால் உறை பனிக்காலம் 50 நாட்களுக்குப் பின் தாமதமாக துவங்கியுள்ளது... கடந்த சில நாட்களாக நீர் பனிப்பொழிவு காணப்பட்ட நிலையில் இன்று அதிகாலை உதகை, தலைக்குந்தா, குதிரை பந்தய மைதானம், காந்தள் போன்ற பகுதிகளில் உறைபனிப் பொழிவு காணப்பட்டது. இதனால் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் புல்வெளிகளின் மேல் பனி உறைந்து வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காட்சியளித்தது... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உறைபனியில் விளையாடி மகிழ்ந்தனர்... ஆங்காங்கே பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்வதையும் நம்மால் பார்க்க முடிந்தது... தலைகுந்தாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 1டிகிரி செல்சியஸ் பதிவானது. உதகையில் 5 டிகிரி செல்சியஸ் பதிவானது. இனி வரும் நாட்களில் மைனஸ் 0 டிகிரியை எட்டும் என எதிர் பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்