வேலூர் அருகே சிறுத்தை நடமாட்டமா? - வெளியான வைரல் வீடியோ!..வனத்துறையினர் சொன்ன தகவல்

x

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஏரிபுதூர் வனப்பகுதியில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக 2 நாட்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், அந்த வீடியோ முற்றிலும் தவறானது என்றும், அதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் வனத்துறையினர் கூறியுள்ளனர். மேலும் அந்த வீடியோவை, ஆந்திராவில் உள்ள வனப்பகுதியில் இருந்து எடுத்து இருக்கலாம் என்றும் அவர்கள் கூறிவருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்