Boy Bestie-யுடன் பல நாள் திட்டம்..! கணவனை காரை ஏற்றிக் கொன்ற மனைவி..சென்னையை அதிர வைத்த சம்பவம்

x

சென்னை அயனாவரத்தை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி பிரேம்குமார் கடந்த 2-ஆம் தேதி அயனாவரம் நியூ ஆவடி சாலையில் கார் மோதி உயிரிழந்தார். இதுதொடர்பாக அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, பிரேம்குமாரின் மனைவி சன்பிரியாவே தனது ஆண் நண்பர் ஹரிகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து, அவரை காரை ஏற்றிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. ஹரி கிருஷ்ணன் தனது நண்பர் சரத்குமாருடன் கூட்டு சேர்ந்து பிரேம்குமாரை கொலை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சன்பிரியா, ஹரி கிருஷ்ணன் இருவரையும் கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த சரத்குமாரை கோயம்புத்தூரில் கைது செய்தனர். பிரேம்குமாரை கொலை செய்ய சரத்குமாருக்கு 5 லட்ச ரூபாய் பேரம் பேசி, 3 லட்ச ரூபாய் பணத்தை சன்பிரியா கொடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. நிலம் வாங்க வைத்திருந்த பணத்தை சன்பிரியா சரத்குமாருக்கு கொடுத்திருப்பதும், விபத்து போல நாடகமாட இருந்த நிலையில் போலீசாரிடம் சிக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்