வேலூரில் ஆவின் பச்சை நிற பால் நிறுத்தம் ஏன்?

x

ஆவின் பாலகங்கள், பால் முகவர்களுக்கு பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தபட்டுள்ளது. நான்கரை சதவீதம் கொழுப்புச் சத்து கொண்ட நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுக்கு மாற்றாக, மூன்றரை சதவீதம் கொழுப்புச் சத்து கொண்ட சமன்படுத்தப்பட்ட ஊதா நிற பால் பாக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. பச்சை நிற பாக்கெட் பால் 22 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஊதா நிற பாக்கெட் பாலும் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஊதா நிற பாக்கெட் பால் அடர்த்தி குறைந்தும், சுவை இல்லாமலும் உள்ளதாக பால் முகவர்கள் மற்றும் பொதுமக்கள் கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஊதா நிற பால் பாக்கெட்டுகளே விநியோகம் செய்யப்படுவதாகவும், ஆவின் நிர்வாகம் தரத்தை பின்பற்றுவதாகவும், வேலூர் ஆவின் பொது மேலாளர் சாம்பமூர்த்தி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்