தண்ணீர் எங்கே?.. கண்ணீரில் மக்கள்..-இரவு பகல் பாராமல் மொட்டை வெயிலிலும் காத்திருக்கும் சோகம்

x

ராமநாதபுரம் கடலாடி ஒச்சத் தேவன்கோட்டை கிராமத்தில் ஒரு குடம் தண்ணீருக்காக கிராம மக்கள் நாள் முழுக்கக் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.

இக்கிராமத்தில் குடிநீர் வெறும் காட்சிப் பொருளாகவே இருந்து வருகிறது... வானம் பார்த்த பூமியான இங்கு கருவேலமரங்கள் அதிகளவில் உள்ளதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், தண்ணீர் வரும் கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இக்கிரமத்தில் தண்ணீர் தொட்டி பழுது அடைந்துள்ள காரணத்தால் மக்கள் தாங்களே அமைத்த கிணற்றில் பிளாஸ்டிக் கேன்களை இறக்கி கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் இரைத்து வீடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்... தண்ணீர் எடுக்கையில் அவ்விடமே கிட்டத்தட்ட போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. அதிலும் தண்ணீர் வராவிட்டால் குடம் 10 ரூபாய் விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது... இதே நிலை நீடித்தால் ஊரைக் காலி செய்து விட்டு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படும் என மக்கள் புலம்பித் தவிக்கின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்