பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் வெற்றி துரைசாமியின் உடல் - மாலை 6 மணிக்கு..வெளியான தகவல்

x

மனித நேயம் அறக்கட்டளையின் இயக்குநர் வெற்றி துரைசாமியின் உடல், சென்னை தியாகராயநகரில் இன்று மாலை தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல், இன்று சென்னை கொண்டு வரப்பட உள்ளது. மாலை 5 மணிக்கு, சி.ஐ.டி. நகரில் உள்ள இல்லத்தில் தலைவர்கள், பொதுமக்கள், அஞ்சலிக்கு வைக்கப்படும் என சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். அதன் பின்னர், மாலை 6 மணிக்கு, தியாகராயநகரில் உள்ள கண்ணம்மாபேட்டை மயான பூமியில், வெற்றி துரைசாமியின் உடல் தகனம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்