தோசைக்காக இறங்கிய TTF - சுத்துபோட்ட குட்டி ரசிகர்கள்

x

விபத்து வழக்கில் ஜாமீன் பெற்ற பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன் 7வது நாளாக காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்தார்...

விடுமுறை என்பதால் இன்று ஏராளமான சிறுவர்கள் காவல் நிலையத்தின் வெளியே நீண்ட நேரம் காத்திருந்து டிடிஎஃப் உடன் போட்டி போட்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். போலீசார் சிறுவர்களை மிரட்டி அங்கிருந்து கலைக்க முற்பட்டனர். டிடிஎஃப் வாசன் காரில் ஏறிச் சென்ற போது ஒரு சில வாண்டுகள் சைக்கிளிலேயே அவரைத் துரத்திச் சென்றனர். சாலை ஓரத்தில் உள்ள உணவகத்தில் தோசை சாப்பிட இறங்கிய வாசனை இளம் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுக்க முயன்றதால் நெடுஞ்சாலை பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் அங்கு வந்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். தோசை சாப்பிட நின்ற டிடிஎப் வாசன் போலீசாரின் கெடுபிடியால் பார்சல் வாங்கிக் கொண்டு காரில் கிளம்பிச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்