மூதாட்டியிடம் முத்தம் கேட்டு டார்ச்சர்.. காமுகனின் வெறிச்செயலால் பரபரப்பு..!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, மதுபோதையில் மூதாட்டியை இரும்பு கம்பியால் தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்...
x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, மதுபோதையில் மூதாட்டியை இரும்பு கம்பியால் தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார். கே.மோரூர் பகுதியைச் சேர்ந்த மாதையன் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த சாந்தா என்ற மூதாட்டியிடம் மதுபோதையில் முத்தம் கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த மூதாட்டியை, இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த தீவட்டிப்பட்டி போலீசார், மாதையனை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்