இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (01-09-2023)

x
  • மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் 2 நாள் ஆலோசனைக் கூட்டம் நிறைவு...கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து, திட்டங்களை விவரித்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள்
  • இந்தியா கூட்டணியில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது...குழுவில் இடம் பெற்றார் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு... பிரச்சார குழுவில் இடம் பெற்றார் திருமாவளவன் எம்.பி...
  • ஒருங்கிணைப்பு குழு மட்டுமின்றி நான்கு பிரதான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன...அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த குழுக்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தகவல்.
  • இந்தியா கூட்டணியில் 19 பேர் கொண்ட பிரச்சார குழு அமைக்கப்பட்டுள்ளது...12 பேர் கொண்ட சமூக ஊடக குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு....
  • முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசித்தோம்...விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, வேலைவாய்ப்பின்மையை ஒழிப்பதே எங்கள் நோக்கம் என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உறுதி...
  • "பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதே நோக்கம்..."காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி திட்டவட்டம்...

Next Story

மேலும் செய்திகள்