கைகொடுத்த தமிழக அரசின் திட்டம்... அதிகரித்த மாணவர்களின் எண்ணிக்கை..! அரங்கேறிய மாற்றம்

x

தமிழ் நாடு பொறியியல் சேர்க்கைக்கு, தமிழக அரசு நடத்தும்

கலந்தாய்வில் கலந்து கொள்ள கடைசி தேதி ஜூன் 6 என

அறிவிக்கப்பட்டிருந்தது. மே 5 முதல் ஜூன் 6 நள்ளிரவு வரை மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 180 பேர், தங்களின் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து, கலந்தாய்விற்கு தேவையான அனைத்தையும் செய்து முடித்துள்ளனர். கடந்த ஆண்டில் மொத்தம் 2.29 லட்சம் பேர் கலந்தாய்வுக்கு விண்ணப்பம் செய்துள்ள நிலையில், நடப்பாண்டில் இவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரம் அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் தமிழ் புதல்வன், புதுமை பெண் திட்டங்கள் மூலம் அரசு பள்ளி மாணவர்கள், உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் போது மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை அளிக்கப்படுகிறது. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பம் செய்தவர்கள் எண்ணிக்கை

அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்