பல்வேறு இடங்களில் டிட்டோஜாக் அமைப்பினர் போராட்டம்

x

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டார கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம், ராமநத்தம் தொடக்ககல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் சேர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், அரசாணை 243-ஐ ரத்து செய்தல் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு, குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் திரளான ஆசிரியர்கள் பங்கேற்றனர்


Next Story

மேலும் செய்திகள்