சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி ரெய்டு.. லட்ச கணக்கில் சிக்கிய பணம் - வெளியான திடுக்கிடும் தகவல்

x

திருவண்ணாமலை மாவட்டம்

சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத இரண்டு லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வேட்டவலம் சாலையில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 77 ஆயிரம் ரூபாயும் ,போளூர் சாலையில் அமைந்துள்ள இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத இரண்டு லட்ச ரூபாயும்

பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக வரைமுறைப்படுத்தாத மனைகளை வரைமுறைப்படுத்த அதிகமாக லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்