பஞ்சாயத்து தலைவியின் கணவர் மீது கொடூர தாக்குதல் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி..

x

தூத்துக்குடியில், பஞ்சாயத்து அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கொடுக்காததால், பஞ்சாயத்து தலைவரின் கணவர் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கொம்மடிக்கோட்டை பஞ்சாயத்து தலைவியாக ராஜபுனிதா இருந்து வருகிறார். பஞ்சாயத்து அலுவலகத்தின் எதிரே, அதே பகுதியை சேர்ந்த தாமஸ் பாண்டியன் என்பவர் கோழி பண்ணை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த கோழிப்பண்ணையில் யாரோ மர்மநபர் நுழைந்து விட்டு சென்றதாகக் கூறி, பஞ்சாயத்து அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை தருமாறு ராஜபுனிதாவின் கணவரான ஜெரோமிடம் தாமஸ் பாண்டியன் என்பவர் கேட்டுள்ளார். ஆனால் போலீசார் அனுமதியின்றி சிசிடிவி காட்சிகளை தர முடியாது என ஜெரோம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாமஸ் பாண்டியன், தனது உறவினர்களுடன் சேர்ந்து ஜெரோமை தாக்கினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்