ரகசிய தகவல்.. பீரோவை திறந்து பார்த்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..வீட்டின் எதிரே குப்பை மேட்டிற்குள்ளும் பகீர்.. ஒரு வயசானவர் பண்ற வேலையா இது?

x

திருவாரூரில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 780 புதுச்சேரி சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.நன்னிலம் அருகே நாடாகுடி கிராமத்தில், சட்ட விரோதமாக புதுச்சேரியில் இருந்து சாராயத்தை கடத்தி வந்து, விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மாவட்ட எஸ்.பி., நாடாகுடியைச் சேர்ந்த உலகநாதன் என்பவரது வீட்டில் ஆய்வினை மேற்கொண்டார். அப்போது வீட்டின் பீரோவில் சுமார் 280 பாட்டில்களில் புதுச்சேரி சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சுந்தர் என்ற முதியவரின் வீட்டிற்கு எதிரே உள்ள குப்பை மேட்டில் சுமார் 500 சாராய பாட்டில்கள் சிக்கியது. இதனையடுத்து, உலகநாதன், சுந்தர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்