ஆக்சிலேட்டரில் எமனாக வந்த செருப்பு - மரத்தில் போய் பயங்கரமாய் மோதிய லாரி

x

திருவாரூர் அருகே, ஆக்சிலேட்டரில் செருப்பு மாட்டி லாக் ஆனதால், கட்டுப்பாட்டை இழந்து லாரி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராகுல் ஆகிய இருவரும், திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் லாரி சர்வீஸில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகின்றனர். மணிவண்ணன் ஸ்ரீவாஞ்சியம் நோக்கி லாரியை ஓட்டிச் சென்ற நிலையில், குடவாசல் செல்லும் சாலையில் வளைவில் திரும்பும்போது, லாரியின் ஆக்சிலேட்டரில் செருப்பு மாட்டி லாக் ஆனது. இதனால் வேகத்தை குறைக்க முடியாமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை ஓரத்தில் உள்ள மரத்தின் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் பயணித்த இருவரும், அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்