சாதியை காரணம் கூறி காதலை ஏற்க மறுத்த பெண் - தற்கொலைக்கு முன் இளைஞர் பேசி வெளியிட்ட வீடியோ

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த காமனூர் தட்டுமலை கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த். 23 வயதான இவர், மாற்று சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். சாதியை காரணம் கூறி காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார், ஒரு கட்டத்தில் பெண்ணை வெளியூருக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. காதலியை தேடி அவரது வீட்டிற்கு சென்ற இளைஞரை பெண் வீட்டார் தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 23 ஆம் தேதி இளைஞர் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்த நிலையில், 10 நாள்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அரவிந்த், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கமால் இளைஞரின் உடலை அவரது உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்றதும், அதை அனுமதிக்க மறுத்த போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியில், இளைஞரின் உடலை பெற்று பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், இளைஞர் தற்கொலை செய்வதற்கு முன் செல்போனில் பேசி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்