ஆய்வுக்கு சென்ற இடத்தில் அரசு பள்ளிக்கு வார்னிங் கொடுத்த ஆட்சியர்

x

திருவண்ணாமலை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தின் கீழ் கரைப்பூண்டி அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார்... மாணவர்களுக்கு பொங்கலை பரிமாற சத்துணவு ஊழியர்கள் சில்வர் கரண்டியின் மீது பிளாஸ்டிக் கவரை சுற்றி தயார் நிலையில் வைத்திருந்த நிலையில் கரண்டியில் இருந்த பிளாஸ்டிக் கவரை தானே முழுவதுமாக அகற்றி இதுபோன்று பிளாஸ்டிக் கவர் சுற்றி மாணவர்களுக்கு உணவை பரிமாறக் கூடாது என அறிவுரை வழங்கினார்... தொடர்ந்து அக் கரண்டியை கழுவி வரக்கூறி தானே மாணவர்களுக்கு உணவை பரிமாறினார். பின்பு மாணவர்களுடன் அமர்ந்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் காலை உணவை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்...


Next Story

மேலும் செய்திகள்