20 நாட்களாக வராத குடிநீர்.. இருபுறமும் குறுக்கே கட்டப்பட்ட கயிறு.. கண்டித்து களமிறங்கிய ஊர் மக்கள்

x

திருப்பத்தூர் அருகே 20 நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜங்களாபுரம் ஊராட்சி பூசாரியூர் கிராமத்தில் தண்ணீர் வராதது குறித்து கேட்டால் ஊராட்சி மன்ற தலைவர் சரிவர பதிலளிப்பதில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்