திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் திருவிழா - ஆட்டம் பாட்டத்துடன் பக்தர்கள் ஊர்வலம்

x

திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழாவையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கோயிலுக்கு காவடி ஊர்வலம் புறப்பட்டது. திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழாவினையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தின் இரணியல், குளச்சல், மணவாளக்குறிச்சி மற்றும் அதன் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், வருடந்தோறும் திருச்செந்தூருக்கு காவடி எடுத்து செல்வது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டும் பக்தர்கள், முருகனுக்கு பல்வேறு வகை காவடிகளை எடுத்து, ஊர்வலமாக புறப்பட்டுள்ளனர். பக்தர்களின் காவடி ஊர்வலம் வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்