தலைக்கேறிய கஞ்சா போதை.. மனைவி, மாமனாரை கத்தியால் சரமாரியாக குத்திய கணவன்... தேனியில் பரபரப்பு

x

தலைக்கேறிய கஞ்சா போதை.. மனைவி, மாமனாரை கத்தியால் சரமாரியாக குத்திய கணவன்... தேனியில் பரபரப்பு சம்பவம்

#Theni #ThanthiTv

தேனியில் உள்ள பிசி பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பூவேந்தன் என்பவர், பவித்ரா என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். கஞ்சா போதைக்கு அடிமையான பூவேந்தன் அடிக்கடி, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மீண்டும் கஞ்சா போதையில், நண்பருருடன் வீட்டிற்கு வந்த பூவேந்தன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனை பவித்ராவின் தந்தை மாயி தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பூவேந்தன், இருவரையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும், சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கொலைக்கு உடந்தையாக இருந்த பூவேந்தனின் நண்பனை, அக்கம்பக்கத்தினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்