மீனவர்கள் வாழ்வாதாரத்தை முடக்கிய இலங்கை கடற்படை - வேதனையில் தமிழக மீனவர்கள்..

x

இலங்கை கடற்பரப்பில் சீன உளவு கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, இலங்கை கடற்படையினர் இலங்கை கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே மீன்பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி, 3 விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்த 23 மீனவர்களை கைது செய்தனர். இதேபோல், நெடுந்தீவு அருகே 2 விசைப்படகுகளில் மீன் பிடித்த 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து, காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். ஒரே நாளில் 5 விசைப்படகுகள், 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததால் ராமேஸ்வரம் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த 14ம் தேதிமுதல் இதுவரை 10 விசைப்படகுகள் மற்றும் 64 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்