உயிர் பலி கேட்கும் சாலை.. சென்னையில் ஒரு மரண பள்ளம்

x

சென்னை போரூர் அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையை, விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். போரூரை அடுத்த செட்டியார் அகரம் பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளுக்காக சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து முடிந்துள்ளது. ஆனால், சாலையை முறையாக சீரமைக்காத‌தால், குண்டும், குழியுமாக மரண பள்ளங்களாக மாறியுள்ளது. மேலும், மழை பெய்து தண்ணீர் தேங்கியுள்ளதால், பள்ளம் இருப்பது தெரியாமல், அதில் செல்வோர் கீழே விழுந்து உயிர்பலி ஏற்படும் ஆபத்தான சூழல் காணப்படுகிறது. கல்லூரி செல்லும் மாணவர்களும் அச்சத்துடன் செல்வதால், விரைந்து சாலையை சரிசெய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளானர்.


Next Story

மேலும் செய்திகள்